தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் பற்றி
தமிழ்நாட்டின் காலநிலை நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும் ஒரு ஒருங்கிணைந்த நிறுவனம்
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் என்பது மாநிலத்தின் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மை உத்திகளை வழிநடத்தவும் ஒருங்கிணைக்கவும் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட உச்சநிலையிலுள்ள அமைப்பாகும்.
ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனமாக, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் தமிழ்நாட்டின் முதன்மையான நான்கு சுற்றுச்சூழல் இலக்கங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்கிறது:
எங்களது தொலைநோக்குப் பார்வை
மாற்றத்தக்க காலநிலை தீர்வுகளை முன்னோடியாகக் கொண்டு வருதல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல்வாழ்வுக்கான உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதன் வாயிலாக தமிழ்நாட்டை ஒரு முன்மாதிரி காலநிலை-மீள்தன்மை மாநிலமாக மாற்றுதல்.
எங்களது இலக்கு
காலநிலை மாற்ற தாக்கங்களுக்கு தீர்வு காணுதல், சூழலியல் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் புதிய கொள்கை அணுகுமுறை ஒருங்கிணைந்த கூட்டாண்மை மற்றும் அனைவரும் சமமாக பங்கெடுத்தல் ஆகியவற்றின் வாயிலாக நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டங்களைச் செயல்படுத்துவதன் வாயிலாக தமிழ்நாட்டின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் உத்திகளை வழிநடத்தி ஒருங்கிணைத்தல்.
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் முக்கிய கருப்பொருள் பகுதிகள்

காலநிலை மாற்றத் தணிப்பு மற்றும் தகவமைப்பு
நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் பசுமைக்குடில் வாயு வெளியேற்றுவதை குறைத்தல், எரிசக்தி திறனை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கும் திறனை உருவாக்குதல்.

நிலையான வள மேலாண்மை
காலநிலை-மாற்றத்தை எதிர்கொள்ளும் விவசாயம் மற்றும் உட்கட்டமைப்புக்கு உதவும் வகையில் நீர், மண் மற்றும் கழிவு மேலாண்மை நடைமுறைகளை நீடித்த நிலையான நிலைக்கு ஊக்குவித்தல்.

பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு
காடுகள், சதுப்புநிலங்கள் மற்றும் கடலோர சூழலியல் அமைப்புகளைப் பாதுகாத்தல், அதே நேரத்தில் இலக்கிடப்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகள் வாயிலாக பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல்.

மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் வளம்
தூய்மையான தொழில்நுட்பங்கள் வாயிலாக காற்று, நீர் மற்றும் மண் மாசு பாடுக்கு தீர்வு காணுதல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல்.

சமூக ஈடுபாடு மற்றும் திறன் மேம்பாடு
உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்துதல், நிறுவன திறனை மேம்படுத்துதல் மற்றும் பயனுள்ள காலநிலை நடவடிக்கைக்காக உள்ளடக்கிய நிருவாகத்தை வளர்த்தல்.
நாங்கள் என்ன செய்கிறோம்
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம், தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த்கிறது — அறிவியல், கொள்கை மற்றும் அடிமட்ட நிலையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காடு மறுசீரமைப்பு, சதுப்புநிலத்திற்கு புத்துயிர் அளித்தல், காலநிலை மாற்ற விளைவுகளை தணித்தல், கடலோர சூழலியலை மீட்டெடுத்தல் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு முதன்மை திட்டங்களின் கீழ் உயரளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் திட்டங்களை நாங்கள் வடிவமைத்து செயல்படுத்துகிறோம்.
Planted
பசுமைப் பரப்பை விரிவுபடுத்துதல்
பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் புவி இருப்பிடக் குறியிடப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, கரிம உறிஞ்சிகள் உருவாக்கப்பட்டு குளுமையான நகர்ப்புறப் பகுதிகள் உருவாக்கப்படுகின்றன.
(20 ராம்சர் தளங்கள் உட்பட)
சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல்
இந்தியாவின் மிகப்பெரிய ஈரநில மறுசீரமைப்பு முயற்சியால், பல்லுயிர்ப் பெருக்கம் பாதுகாக்கப்பட்டு, நீர் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.
கடலோர மீள்திறன்
கடற்கரைகளைப் பாதுகாக்கவும், நீலக் கார்பனைச் சேமித்து வைக்கவும், மாங்குரோவ் காடுகள், கடற்புற்கள், பவளப்பாறைகளை மீட்டெடுத்தல் மற்றும் கடலோர வேளாண்-வனவியலை ஊக்குவித்தல்.
திறன் மேம்பாடு/வளர்ப்பு
மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைச் செயல்படுத்த காலநிலை மாற்றத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட செயல் திட்டங்கள் .
தரவு சார்ந்த தணிப்பு உத்திகள்
உமிழ்வுகளைக் குறைத்தல்
தமிழ்நாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான நிதி ஒதுக்கீடு, பசுமை இல்ல வாயுக்களின் பட்டியல் தயாரிப்பு மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றுவதற்கான மேம்பாட்டுப் பாதைகள்.
புதுமையான காலநிலை நிதி மாதிரிகள்
காலநிலை நிதி மற்றும் புத்தாக்கம்
மாற்றத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க, கார்பன் சந்தைகள், உலகளாவிய கூட்டாண்மைகள் மற்றும் அரசு-தனியார் மாதிரிகளைப் பயன்படுத்துதல்.
நீலகிரி முதல் நாகப்பட்டினம் வரை—காடுகள் முதல் கடல் வரை—தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் காலநிலை மாற்ற நடவடிக்கை ஒவ்வொரு நிலப்பரப்பையும் சமூகத்தையும் சென்றடைகிறது .
எங்களது கட்டமைப்பு
பெரும் தாக்கத்தை உருவாக்கும் ஒருங்கிணைந்த நிர்வாக முறை
2013- ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 8-இன் கீழ் , பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த நிருவாக மாதிரி, தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் ஒரு பிரத்யேக சிறப்பு நோக்க திட்டமாக (SPV) செயல்படுகிறது. இது, தனது காலநிலை செயல் திட்டத்தை நிறுவனமயமாக்குவதற்காக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் நிருவாகக் குழு
திருமதி சுப்ரியா சாஹு இ.ஆ.ப.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
திரு J. ஜெயகாந்தன், இ.ஆ.ப
அரசுச் செயலாளர், நீர்வளத் துறை
Dr D. Karthikeyan I.A.S.,
திரு C.A. ரிஷப், இ.ஆ.ப
திரு வி. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப.
திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப
டாக்டர் சீனிவாஸ்.R. ரெட்டி, இ.வ.ப
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) மற்றும் உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் (முழு கூடுதல் பொறுப்பு) & தலைமை திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம்.
டாக்டர் ஜெயந்தி M. இ.வ.ப.
தலைவர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
திரு மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், எரிசக்தி துறை (மு.கூ.பொ).
திரு. A.R. ராகுல் நாத், இ.ஆ.ப
மேலாண் இயக்குநர், தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம்/
இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
Thiru. Bakan Jagdish Sudhakar I.F.S.,
தலைமை செயல் அதிகாரி (CEO)
தலைமைத்துவம்
Tmt Supriya Sahu, I.A.S.,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை.
தலைவர், தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம்
திரு. A.R. ராகுல் நாத், இ.ஆ.ப
மேலாண் இயக்குநர், TNGCC/
இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
முக்கிய திட்ட இயக்குநர்கள்
திரு. I. அன்வர்தீன், இ.வ.ப.
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் & தலைமை திட்ட இயக்குநர், (முழு கூடுதல் பொறுப்பு) பசுமைத் தமிழ்நாடு திட்டம்
திரு. A.R. ராகுல் நாத், இ.ஆ.ப
லைமை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற திட்டம்
டாக்டர் சீனிவாஸ்.R. ரெட்டி, இ.வ.ப
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) மற்றும் உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் (முழு கூடுதல் பொறுப்பு) & தலைமை திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம்.
திரு. தீபக் S. பில்கி, இ.வ.ப
தலைமை வனப் பாதுகாவலர், தலைமை திட்ட இயக்குநர், தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு திட்டம்
பணி பணிப்பாளர்/ உதவிப் பணி இயக்குனர்கள்
திரு. சுமேஷ் சோமன் இ.வ.ப
திட்ட இயக்குநர், தமிழ்நாடு நெய்தல் மீட்சி (TN-SHORE) இயக்கம்
Thiru. Tushar Shrihari Shinde I.F.S.,
Thiru. Akella Chaitanya Madhavudu I.F.S.,
உதவி திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஈரநில திட்டம்
Dr. Guru Swamy Dabbala
Deputy Conservator of Forests, Green Tamil Nadu Mission
Ms Lavanya SP I.F.S.,
உதவி திட்ட இயக்குநர்,
பசுமைத் தமிழ்நாடு திட்டம்
குழு - தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம்
பேராசிரியர் டாக்டர் R. ரமேஷ் - ஆலோசகர் (தொழில்நுட்பம்)
ஆலோசகர் (தொழில்நுட்ப)
Thiru. Bakan Jagdish Sudhakar I.F.S.,
தலைமை செயல் அதிகாரி (CEO)
எங்கள் வழிகாட்டி நெறிமுறைகள்
அறிவியல், சமத்துவம் மற்றும் சூழலியல் அமைப்புச் சிந்தனை வாயிலாக காலநிலை மாற்றத்தை நிருவகிப்பதற்கான மாற்றம்
தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம், அறிவியலை அடிப்படையாகவும், சமூகத் தேவைகளை மையமாகவும் கொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன், காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த, முறைமை சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. நாங்கள் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை உள்நாட்டு தீர்வுகளுடன் இணைத்து, அளவிடக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பயனுள்ள தாக்கத்தை உறுதி செய்கிறோம்.
காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்தின் ஆறு அடிப்படைக் கொள்கைகள்

சுற்றுச்சூழல் சார்ந்த திட்டமிடல்
காலநிலைத் தகவமைப்பு மற்றும் மீட்டெடுத்தலுக்கான அடித்தளமாக, காடுகள், ஈரநிலங்கள், கடலோரப் பகுதிகள் போன்ற சூழலியல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

அறிவியல் மற்றும் தரவு அடிப்படையிலான நடவடிக்கை
ஒவ்வொரு நடவடிக்கையும் நம்பகத்தன்மை மற்றும் மீண்டும் செயல்படுத்தக்கூடிய தன்மையை உறுதி செய்வதற்காக, புவிசார் பகுப்பாய்வு, கண்காணித்தல், அறிக்கையிடல் மற்றும் சரிபார்ப்பு அமைப்புகள் (MRV) மற்றும் காலநிலை மாற்றத்தை கணித்து திட்டமிடுவது ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

ஒருங்கிணைந்த நிருவாகம்
தனித்தனிப் பிரிவுகளாக இயங்குவதை மாற்றி, ஒருங்கிணைத்து செயல்படும் திறனை வளர்ப்பதற்கு, நாங்கள் துறைகள், திட்டங்கள், மாவட்டங்கள் மற்றும் சமூகங்கள்என அனைத்து நிலையிலும் இணைந்து செயல்படுகிறோம்.

சமத்துவம் மற்றும் பங்கேற்பு
சமூகம் தலைமையிலான தீர்வுகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை உள்ளடக்குதல் ஆகியவை எங்கள் திட்ட வடிவமைப்பிற்கு மையமாக உள்ளன.

அளவுபடுத்தக்கூடிய, சுழற்சி முறை தீர்வுகள்
அளவிடக்கூடிய, சுழற்சி அடிப்படையிலானபொருளாதாரத் தீர்வுகள் பேரார்வம் மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றுடன்

துரிதப்படுத்தப்பட்ட நிகர-பூஜ்ஜிய உமிழ்வு மாற்றம்
நாங்கள் 2070-ஆம் ஆண்டுக்கு முன்பே தமிழ்நாட்டை நிகர பூஜ்ஜிய உமிழ்வுப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு, தணிப்பு உத்திகளை முனைப்பாக வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.
காலவரிசை
2021
நிறுவன அடித்தளம்
- பிரிவு 8-இன் கீழ் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் (TNGCC) நிறுவப்பட்டது.
- தமிழ்நாட்டின் காலநிலை தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது
நோக்கம்: சூழலியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள்
2022
காலநிலைத் திட்டங்களின் தொடக்கம்
பசுமைத் தமிழ்நாடு திட்டம் (GTM) தொடங்கப்பட்டது
நோக்கம்
- பசுமைப் பரப்பை விரிவுபடுத்துதல்
- நிலப்பரப்பை மறுசீரமைத்தல்
- மரங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரங்கள்
2023
சூழலியல் அமைப்பு மறுசீரமைப்பை விரிவுபடுத்துதல்
- தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம் (TNWM) தொடங்கப்பட்டது
20 ராம்சர் தளங்கள் உட்பட 100 ஈரநிலங்கள் மீட்டெடுத்தல்
- தமிழ்நாடு காலநிலை மாற்ற திட்டம் (TNCCM) தொடங்கப்பட்டது
38 மாவட்ட காலநிலை இயக்கங்கள் உருவாக்கப்பட்டது.
2024
கடலோரப் பகுதிகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துதல்
- தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு திட்டம் (TNCRM) தொடங்கப்பட்டது
கடலோர மீட்டெடுப்பு
சூழலியல் பாதுகாப்பு
நீலப் பொருளாதாரத்திற்கு ஆதரவு அளித்தல்
2025
உலகளாவிய கூட்டாண்மைகள் மற்றும் புத்தாக்கங்கள்
- தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (TN-SHORE) தொடங்கப்பட்டது
- உலக வங்கியுடன் ரூபாய் 1,675 கோடி
- நீலப் பொருளாதாரம் மற்றும் கடலோர மீட்டெடுப்பு
- நகர்ப்புறத்தில் வெப்பத்தை தணிப்பதற்கான முன்னோடித் திட்டங்கள்
- ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்துடன் கூட்டாண்மையில்
- ஜெர்மன் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் அமைப்பு (GIZ) மற்றும் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றம் (CEEW) உடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்
- உமிழ்வு கண்காணிப்பு
- காலநிலைக்கான நிதி ஒதுக்கீடு
- கொள்கை வழி முறைகள்
அங்கீகாரங்கள்
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பூமிக்கான வெற்றியாளார் விருது - 2025
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) வழங்கப்பட்டது
காலநிலை நடவடிக்கை, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நிருவாகத்தில் தமிழ்நாட்டின் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் பயன்விளைவுடைய தாக்கத்தை அங்கீகரிகத்தல் விதமாக
தமிழ்நாடு
TNGCC recognized by NITI Aayog and international partners model for climate governance.
தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்தின் முயற்சிகள், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) , உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) உள்ளிட்ட உலகளாவிய மன்றங்களில், பின்பற்றக்கூடிய ஒரு காலநிலை நடவடிக்கை மாதிரியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மாநில அளவிலான பசுமைக் காலநிலை நிதி, பசுமை நிதித் தலைமைத்துவத்தில் முன்னிலை வகிப்பதற்காக, தேசிய ஊடகங்கள் மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மைகளால் பாராட்டப்பட்டுள்ளது.
முக்கிய ஒத்துழைத்து நிறுவனங்கள்
ஐ.நா முகமைகள்
சர்வதேச
தேசிய சமூக மற்றும் உள்ளூர் வலையமைப்புகள்
சமூக மற்றும் உள்ளூர் வலையமைப்புகள்
தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் (TNGCC) பின்வருவனவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. அவையாவன:-
- உள்ளூர் காலநிலை திட்டங்களுக்காக ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன்
- சூழலியல் சார்ந்த வாழ்வாதாரங்களுக்காக சுயஉதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர் மன்றங்களுடன்
- பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன்