2025-2026 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ரூ. 50.00 கோடி தொடக்க ஆதார நிதியுடன் "தமிழ்நாடு கடல் வள அறக்கட்டளை" (Tamil Nadu Marine Resource Foundation) அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - சென்னை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் ரூ. 1.00 கோடி மொத்த செலவில் "பொருள் மீட்பு வசதிகள்" (Material Recovery Facilities - MRF) அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாட்டின் ஆறுகளில் நெகிழி (Plastic) மாசுபாட்டினைக் குறைப்பதற்கு "மிதவை வேலிகள்" (Trash Boom) நிறுவுதல் - சென்னையின் ஆற்றுப்பகுதிகளில் ரூ. 4.00 கோடி மொத்த செலவில் முன்னோடித் திட்டம் (Pilot project) - அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - சென்னை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் ரூ. 1.00 கோடி மொத்த செலவில் "பொருள் மீட்பு வசதிகள்" (Material Recovery Facilities - MRF) அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் ரூ. 1.75 கோடி மொத்த செலவில் " கழித்தொதுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்கள்" அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளுக்கு "நீலக்கொடி கடற்கரை" (Blue Flag Beach) சான்றிதழ் பெறும் திட்டம் - தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின்/தமிழ்நாட்டின் கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டத்தின் (TN-SHORE) கீழ் ரூ. 24.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு காலநிலை மாற்றம் தொடர்பான நிருவாகக் குழு – ஆளுகைக் குழுவில் டாக்டர் அறிவுடை நம்பி அப்பாதுரையை உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தை (UNEP) நிறுவன உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டது.

2021-22 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் (CMGFP) - 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2027 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்திற்கு இத்திட்டத்தின் 2-ஆம் கட்டத்தைச் செயல்படுத்த ரூ.9,06,54,810 ஒப்பளித்தல்.